[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

பார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம்!

singer-vaikom-vijayalakshmi-gets-engaged

பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் நேற்று நடந்தது. 

பிருத்விராஜ் நடித்த ’ஜே.சி.டேனியல்’ படத்தில் இடம்பெற்ற ’காற்றே காற்றே’ என்ற பாடல் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமானவர் மலையாள பாடகி, வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர், அடுத்து ’வீர சிவாஜி’ படத்தில் ’சொப்பன சுந்தரி நான் தானே’, ’என்ன மோ ஏதோ’ படத்தில் ’புதிய உலகை புதிய உலகை’ உட்பட தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழ், மலையாளத்தில் தனது வித்தியாச மான குரல் மூலம் பிரபலமான இவரது வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதை விஜயகுமார் இயக்குகிறார்.  விஜயலட்சுமியாக, மீன் விற்றுப் படிக்கும் மாணவி ஹனன் ஹமீது நடிக்கிறார்.


இந்நிலையில் விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடை பெற்றது. ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக தனது திருமணம் நின்றுவிட்டதாக வைக்கம் விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அனூப், இன்டீரியர் டெக்கரேஷன் கான்ட்ராக்டராகவும் இருக்கிறார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் விஜயலட்சுமியின் வீட்டில் நேற்று நடைபெற்றது. திருமணம் அக்டோபர் 22 ஆம் தேதி வைக்கம் மகாதேவ கோயிலில் நடக்கிறது.

நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close