[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்

விஜய் சேதுபதியை இயக்கும் ’வாலு’ இயக்குனர்

vijay-sethupathi-signs-vijay-chander-film

’வாலு’, ’ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

பாலாஜி தரணிதரன் இயக்கும் ’சீதக்காதி’, மணிரத்னம் இயக்கும் ’செக்கச்சிவந்த வானம்’, பிரேம்குமார் இயக்கும் ’96’, தியாகராஜன் குமாரராஜா இயக்கும் ’சூப்பர் டீலக்ஸ்’ படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதையடுத்து அவர், விஜய சந்தர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இவர், சிம்பு நடித்த ‘வாலு’, விக்ரம் நடித்த ’ஸ்கெட்ச்’ படங்களை இயக்கியவர். இந்தப் படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனம் எம்.ஜி.ஆர் நடித்த உழைப்பாளி, எங்க வீட்டு பிள்ளை, அஜீத்தின் வீரம், விஜய்யின் பைரவா உட்பட பல படங்களை தயாரித்துள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது.

Read Also -> மீண்டும் அப்பா ஆகிறார் திலீப்!

Read Also -> பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்!

இதுபற்றி இயக்குனர் விஜய்சந்தர் ’புதிய தலைமுறை’ இணையத்தளத்திடம் பேசும்போது, ‘சென்னையில் நடக்கும் கதைதான் இதுவும். எனது முந்தைய படங்களைப் போல இதுவும் மாஸ் படமாக இருக்கும். ஆனால், வித்தியாசமான ஆக்‌ஷன் களம். காமெடி, ரொமான்ஸ், எமோஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் இருக்கும். ஸ்கிரிப்ட் வேலை போய்க்கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி எனக்குப் பிடித்த நடிகர். அவருடன் பணிபுரிவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக் கிறேன்’ என்றார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close