[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

மீண்டும் அப்பா ஆகிறார் திலீப்!

dileep-kavya-to-welcome-new-member-to-family

மலையாள நடிகர் திலீப் மீண்டும் அப்பாவாகிறார். 

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப். இவர், சக நடிகை மஞ்சு வாரியரை காதலித்து கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் மீனாட்சி என்ற மகள் உள்ளார். பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். மகள் மீனாட்சி திலீப்புடன் உள்ளார். இவர்கள் பிரிவுக்கு நடிகை காவ்யா மாதவ ன்தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இதனை இருவரும் மறுத்தனர்.

(மஞ்சு வாரியர்)

காவ்யா மாதவன் கடந்த 2010-ல் தொழில் அதிபர் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து துபாய் சென்ற காவ்யா மாதவன் சில நாட்களிலேயே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து கேரளா வந்துவிட்டார். தனியாக வாழ்ந்து வந்த திலீப் - காவ்யா மாதவன் இருவரும் நெருங்கி பழகினர். அவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி எனது மகளின் முடிவை பொறுத்தே நான் மறுமணம் செய்வேன் என்று திலீப் கூறியிருந்தார். அதன்படி 2016ஆம் ஆண்டு காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார். 

இதையடுத்து நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தார். இந்த வழக்கில் காவ்யா மாதவனுக்கும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் காவ்யா கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குழந் தையை வரவேற்க இரண்டு பேர் குடும்பமும் தயாராகி வருகின்றன. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close