[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

அழகாக இருக்க, யாருக்குத்தான் ஆசை இருக்காது? புதிய தோற்றத்தில் சோனாலி பிந்த்ரே!

sonali-bendre-shares-her-new-look-wearing-a-wig

’அழகாக இருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது?’ என்று நடிகை சோனாலி பிந்த்ரே கூறியுள்ளார்.

தமிழில் ’பம்பாய்’ படத்தில் ’ஹம்மா ஹம்மா’ பாடலுக்கு ஆடியவர் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. பின்னர், ’காதலர் தினம், ’கண்ணோடு காண்பதெல்லாம்’ படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

 2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெல்லை திருமணம் செய்துகொண்ட இவர், பிறகு நடிப்பதில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார். 43 வயதாகும் சோனாலி தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு ஆதரவாக பல்வேறு நடிகர், நடிகைகளும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

Read Also -> பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

Read Also -> பாஜக சார்பில் போட்டியா- என்ன சொல்கிறார் மோகன்லால்? 

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சோனாலி, அதில் விக் வைத்துக்கொண்டு புதிய தோற்றத்தில் போஸ் கொடுத்துள்ளார். 

அந்த வீடியோவுக்கு கீழே, ‘’தோற்றம்தான் என் அழகிய சாபம். அழகாக இருக்க, யாருக்குத்தான் ஆசை இருக்காது? நமது தோற்றம் அழகாக இருப்பது முக்கியம். அது ஆழ்ந்த உளவியல் தாக்கத்தை நம் மீது ஏற்படுத்தும். தன் தோற்றம் பற் றிய கர்வம் இருப்பது மற்றவர்களுக்கு ப் பாதிப்பை ஏற்படுத்தாது. உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் விஷயங்களை செய்து கொண்டிருப்பது முக்கியம். அது விக் வைப்பதாக வும், பளிச்சென தெறிக்கும் சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசுவதாகவும் ஹீல்ஸ் அணிவதாகவும் இருக்க லாம். எது சரி, எது தவறு என்பதை உங்களுக்கு வேறு யாரும் சொல்ல முடியாது. விக் வைப்பதற்காக நான் சோதனை செய்தபோது, எனக்கு என் மீதே சந்தேகம் வந்தது. என் தோற் றம் பற்றி கர்வம் கொண்டவளா என்று? சினிமா துறையில் இருக்கும்போது, நீங்கள் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கப் படுகிறீர்கள். ஒரு வேளை அது எனக்குள் வேரூன்றியிருக்கும் விஷயமாகவும் இருக்கலாம். எப்படி இருந்தால் மகிழ்வாக இருப் பீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் அதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள் ளுங்கள்’’ என்று கூறியுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close