[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

முதன் முதலில் வாங்கிய மாருதி 800 காரில் இன்னும் பயணிக்கும் நடிகர்!

actor-ramakrishna-is-still-driving-in-his-first-maruti-800-car

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே விதவிதமான கார்களில் வலம் வரும் இப்போதை நடிகர்களுக்கு மத்தியில் வித்தியாசமானவராக இருக்கிறார் இந்த முன்னாள் ஹீரோ!
அவர் முதன் முதலில் வாங்கிய மாருதி 800 காரிலேயே இன்னும் வலம் வருகிறார் என்றால் அது வித்தியாசமானதுதானே!

தமிழில் கே.பாலசந்தர் இயக்கிய ’பொய்க்கால் குதிரை’ படத்தில் ஹீரோவாக நடித்தவர் ராமகிருஷ்ணா. பிறகு கன்னடத்துக்கு சென்றுவிட்ட ராமகிருஷ்ணா அங்கு சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இப்போது கேரக்டர் ரோலில் நடித்துவரும் அவர், தமிழில் காதலே என் காதலே, நிசப்தம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் மாருதி 800 கார் அறிமுகப்படுத்தப்பட்டபோது, முதன்முதலாக வாங்கிய கன்னட நடிகர். இவருக்குப் பிறகு கன்னட ஹீரோ சிவராஜ்குமார், மாருதி 800 காரை வாங்கினார். அப்போது இந்த காருக்கு மவுசு ஜாஸ்தி. அதற்கு பிறகு ஏகப்பட்ட மாடல் கார்கள் வந்துவிட்டன. மாருதியே கூட புதிய புதிய கார்களை வடிவமைத்து விற்றுவருகிறது. இப்போதைய நடிகர்கள் கோடிகணக்கான ரூபாய் மதிப்பு கொண்ட சொகுசு கார்களில் வலம் வருகின்றன. ஆனால், கடந்த 35 வருடங்களாக முதன் முதலாக வாங்கிய அந்த மாருதி 800 காரையே இப்போதும் பயன்படுத்திவருகிறார் ராமகிருஷ்ணா.

ஏன் இப்படி?

‘இது, எனக்கு பிடித்த கார். நான் வாங்கிய ஆறு நாட்களுக்குப் பிறகுதான் சிவராஜ்குமார் இந்த காரை வாங்கினார். அப்போது வாங்கியவர்கள் எல்லோரும் அடுத்த சில வருடங்களிலேயே காரை மாற்றிவிட்டார்கள். நான் மாற்றவில்லை. 80-களில் இந்த காரை ஓட்டுவதற்கு நடிகர்கள் பலர் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அம்பரீஷ் தினமும் இதை ஓட்டுவார். நடிகர் ரவிச்சந்திரன் இதை நான்கைந்து முறை வாடகைக்கு எடுத்து சென்றிருக்கிறார். இப்போது இதற்கு மவுசு இல்லை. ஆனால் இப்போதும் நான் இதை ஓட்டி வருகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவில் அதிக வாய்ப்புகள் வரவில்லை. அதனால் எனது தோட்டத்துக்கு இதே காரில் சென்று வருகிறேன். பெங்களூரில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறேன். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டி வருகிறேன்’ என்கிறார் ராமகிருஷ்ணா.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close