[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம்

director-shankar-is-fined-rs-10-000

எந்திரன் திரைப்பட கதை உரிமை கோரப்படும் வழக்கில் ஆஜராகாத இயக்குநர் ஷங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம்10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அனுமதி பெறாமல் தன்னுடைய கதை திரைப்படமாக்கப்பட்டுள்ளதால் காப்புரிமைச் சட்டத்தின்படி ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கில், ஆவணங்களை சரிபார்த்து சாட்சியங்களை பதிவு செய்யும் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக 2 முறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் ஷங்கர் ஆஜராகவில்லை.

Read Also -> முதன் முதலில் வாங்கிய மாருதி 800 காரில் இன்னும் பயணிக்கும் நடிகர்!

Read Also -> காதல் விவகாரம்: கடுப்பான ரவி சாஸ்திரி 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷங்கர் படபிடிப்பிற்காக வெளியூரில் இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக் கோரி அவரது மேலாளர் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, சாட்சிகள் மற்றும் குறுக்கு விசாரணைகளை முடிக்க உத்தரவிட்டுள்ள நிலையில் தொடர்ந்து அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என தெரிவித்தார். அதனால் ஷங்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும், அதனை புளூ கிராஸுக்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close