[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

நடிகர் ஹரிகிருஷ்ணா சடலத்துடன் செல்ஃபி: மருத்துவமனை ஊழியர்கள் நீக்கம்!

telangana-hospital-sacks-4-staffs-for-selfie-with-nandamuri-harikrishna-s-body

விபத்தில் மரணமடைந்த தெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா சடலத்துடன் செல்ஃபி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான என்.டி ராமாராவின், நான்காவது மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர், பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இவர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனர். 

Read Also -> ’யுடர்ன்’ ரீமேக்கில் நடிக்க இதுதான் காரணம்: சமந்தா

 நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கவாலி என்ற ஊரில் நடக்கும் ரசிகர் ஒருவரின் திருமணத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரே காரை ஓட்டிச் சென்றார். நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் கார் மோதியது.

 இதில் ஹரி கிருஷ்ணா தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

அங்கிருந்தவர்கள் அவரை காமினேனி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Read Also -> ஆன்மிகம், அமெரிக்கா டூ மீண்டும் சினிமா: தனுஸ்ரீ திடீர் மாற்றம்!

இவருக்கு கல்யாண் ராம், ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய மகன்களும் சுகாசினி என்ற மகளும் உள்ளனர். இதில் கல்யாண் ராமும் ஜூனியர் என்டிஆரும் ஆந்திராவின் டாப் ஹீரோக்கள். ஹரிகிருஷ்ணாவின் சகோதரர் பாலகிருஷ்ணாவும் பிரபலமான தெலுங்கு ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உயிரிழந்த ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் காமினேனி மருத்துவமனை ஊழியர்கள் நான்கு பேர் செல்ஃபி எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அந்த நான்கு பேரையும் மருத்துவமனை நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கி உள்ளது. அதோடு அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவும் செய்துள்ளனர். 

இது பற்றி மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ’இது எதிர்பாராத சம்பவம். எங்கள் ஊழியர்கள் செய்த இந்த தவறுக்காக நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துகொள்கிறோம். ஹரிகிருஷ்ணா குடும்பத்தாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த சம்பவம் கண்டத்துக்குரியது. இது எங்கள் கவனத்துக்கு வந்ததும் உடனடியாக அவர்களை வேலையை விட்டு நீக்கிவிட்டோம்’ என்று தெரிவித்துள்ளார். 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close