[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

கென்யாவில் ’ஜல்லிக்கட்டை’ படமாக்கியது ஏன்?

jallikattu-movie-director-explains-why-his-team-shoots-in-kenya-s-maasai-mara

ஜல்லிக்கட்டு படத்தை கென்யாவில் உள்ள மசாய்மாரா என்ற இடத்தில் படமாக்கியது ஏன் என்று அதன் இயக்குனர் விளக்கம் அளித்தார்.

மாபெரும் மக்கள் எழுச்சியான, மெரினா புரட்சியை மையப்படுத்தி உருவாகும் படம், ‘ஜல்லிக்கட்டு’. சந்தோஷ் இயக்கும் இந்தப் படத்தை அகிம்சா புராடக்ஷ்ன் சார்பில் நிருபமா தயாரிக்கிறார். இந்திப் பட இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைத்தயாரிப்பு செய்கிறார். 

Read Also -> நடிக்க வாய்ப்பு தர மாட்டேங்கிறாங்களே? வில்லன் வருத்தம்

Read Also -> இந்து கடவுள்கள் பற்றி அவதூறாக பேசியதாக பிரகாஷ் ராஜ் மீது வழக்கு!  

வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அவர்களின் நேரடி தொடர்பு இல்லாத ஒரு விஷயத்திற்காக ஒன்றிணைந்து போராடியது எப்படி என்பதை கூறும் படமாக இது இருக்கும். உலகம் முழுவதுமான மக்கள் எப்படி ஒரு புள்ளியில் இணைந்தார்கள் என்பதை புதிய வடிவத்தில் சொல்லியிருக்கிறோம்’ என்கிறார்கள் இயக்குனர் சந்தோஷூம் தயாரிப்பாளர் நிருபமாவும். 

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமான இதன் படப்பிடிப்பு, கென்யாவின் மசாய்மாரா எனும் பகுதியிலும் நடந்துள்ளது. அந்த பகுதியில் வாழும் காளை இனமும் நமது ஜல்லிக்கட்டு காளை இனமும் ஒரே இனம் என்பதை டி.என்.ஏ பரிசோதனைகள் நிரூபித்துள்ளன. இதனால்தான் அங்கு சென்று படமாக்கியுள்ளோம் என்கிறார் சந்தோஷ்.

Read Aslo -> என்.டி.ராமராவ் மகனும் நடிகருமான ஹரி கிருஷ்ணா விபத்தில் பலி

உலகின் எல்லா பகுதிகளிலும் நடைபெற்ற போராட்ட நிகழ்வுகளோடு மெரினாவின் உண்மைச் சம்பவங்களும் படத்தில் உள்ளன. புதுமுகங்களோடு இயக்குனர் சந்தோஷூம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ரமேஷ் விநாயகம் இசையக்கிறார். கடைசிக் கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close