[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

‘துபாய்’ காமெடி காம்போவில் மீண்டும் கலக்கப் போகும் வடிவேலு

vadivelu-joins-hand-with-parthiban-again

பார்த்திபன் காம்போவில் நடிகர் வடிவேலு மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது.

வடிவேலு- பார்த்திபன் காமெடி காம்போ தமிழ் சினிமாவின் மாபெரும் கூட்டணி என கொண்டாடப்படுகிறது. இன்றைக்கும் காமெடி சானல்களில், சமூக வலைத்தளங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்பட நகைச்சுவை காட்சிகள் மக்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. இவர்கள் இருவரின் காமெடி காட்சிக்காகவே ‘பாரதி கண்ணம்மா’ வசூலில் பெரிய சாதனை செய்தது. இதில் பார்த்திபனை பார்த்து வடிவேலு ‘துபாய்ல எங்க இருந்தீங்க? பக்ரீனா? சார்ஜா? அபுதாபியா?’என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்பார். அதற்கு பார்த்திபன், ‘நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய்’என்பார். அந்த அஃமார்க் காமெடியை மிஞ்ச தமிழ் சினிமாவில் இதுவரை வேறு காமெடி வெளியாகவில்லை. இவர்களின் காம்போ பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் இவர்களின் கூட்டணி மீண்டும் தமிழ்த்திரை உலகில் அமையவே இல்லை.

இந்நிலையில் மீண்டும் இந்த இருவரின் கூட்டணியின் அமைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் சுராஜ், புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பார்த்திபன், வடிவேலு மீண்டும் இணைந்து நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தில் படப்பிடிப்பு தொடங்கப் போவதாகக் கூறப்படுகிறது. சுராஜ் ஏற்கெனவே வடிவேலுவின் மிகச் சிறந்த காமெடி காட்சிகளுக்கு பின்புலமாக இருந்திருக்கிறார். எனவே அவர் எடுக்கும் காமெடி படத்தில் வடிவேலு நடிக்க இருக்கிறார் என்பது திரை ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close