[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

டிவி. தொடருக்கு வந்தார் ஜெயப்பிரதா!

jaya-prada-debuts-on-small-screen

முன்னாள் ஹீரோயின் ஜெயப்பிரதா இந்தி டிவி தொடர் ஒன்றில் நடித்துள்ளார்.

தமிழில், மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஜெயப்பிரதா. 80-களில் டாப் ஹீரோயினாக இருந்த இவர், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். தற்போது தமிழில் ’கேணி’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே டிவி தொடரில் நடித்துள்ளார் ஜெயப் பிரதா. ’பெர்பக்ட் பதி’ என்ற இந்த இந்தி தொடரில் முற்போக்கு சிந்தனை கொண்ட மாமியாராக நடிக்கிறார். 

இதுபற்றி ஜெயப்பிரதா கூறும்போது, ‘டிவி தொடர்களில் மாமியாரை எப்படி காண்பிக்கிறார்கள் என்பது தெரியும். ஆனால், இதில் முற்போக்கு சிந்தனை கொண்ட கேரக்டர் என்றதால் உடனே சம்மதித்தேன். அதோடு ஒவ்வொருவரும் தங்களுக்கு சரியான துணை அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் விதமாகவும் எனது கேரக்டர் இதில் இருக்கும்.

சின்னத்திரை தொடர்கள்தான் இப்போது கிராமத்து மக்களை அதிகம் சென்றடைகிறது. இதன் மூலம் நம் கருத்துகளை அவர்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கலாம்’ என்றார். 

சினிமாவில் நடிப்பது பற்றி கேட்டபோது, ‘தெலுங்கு, தமிழில் நடித்துள்ள படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இந்தியில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close