[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

நிறைவேறியது த்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை

actress-trisha-in-rajinikanth-films

ரஜினியுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடிகை த்ரிஷா நடிக்க உள்ளார்.

‘காலா’ மற்றும் ‘2.0’ படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இவர்களுடன் பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் நடிகை சிம்ரன் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. சிம்ரன் ரஜினியின் படத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. இந்நிலையில் படத்தில் முதல்முறையாக நடிகை த்ரிஷாவும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகி உள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

த்ரிஷா சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கு களத்தில் போட்டியாக இருந்தவர் நயன்தாராதான். ஆனால் நயன்தாரா ரஜினியுடன் ஏற்கனவே ஜோடிபோட்டு விட்டார். அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷாவுக்கு ரஜினியுடன் நடிப்பது நீண்ட நாள் விருப்பம். இதனை ஏற்கனவே பல முறை அவர் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் ரஜினியுடன் நடிக்க த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் அவர் இருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close