[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

நிலச்சரிவில் சிக்கிய 18 மணி நேரம்: நடிகர் ஜெயராம் உருக்கம்!

we-have-trapped-18-hours-in-landslide-jeyaram

நிலச்சரிவில் சிக்கி, 18 மணி நேரம் குடும்பத்துடன் தவித்தேன் என்றும் குழந்தைகளுக்கு தேவையான உணவுகளை உடனடியாக வழங்கு மாறும் நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில், கடந்த 50 வருடத்தில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதால் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டதால் கேரள மாநிலம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சாலை போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தண்டவாளங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து ரத்து செய்ய ப்பட்டன. மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரைகளிலும் தஞ்ச மடைந்தனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். 

Read Also -> நிலச்சரிவில் சிக்கிய 18 மணி நேரம்: நடிகர் ஜெயராம் உருக்கம்!

Read Also -> கேன்சரில் பாதித்த நடிகை சுஜாதா குமார் மரணம்! 

Read Also -> ஜெயலலிதாவாக நடிக்க ஐஸ்வர்யா ராய், அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை

இந்த மழை வெள்ளத்துக்கு பிரபலங்களின் வீடும் தப்பவில்லை. திருவனந்தபுரத்தில் உள்ள நடிகர் பிருத்விராஜின் வீட்டுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. இந்த வீட்டில் இருந்த அவரது அம்மா மல்லிகா சுகுமாறன் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டார். நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் நிலச்சரிவில் சிக்கிய சம்பவமும் நடந்தது.

Read Also -> வாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை ! நடிகர் சங்கம்

Read Also -> ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போட்டி: பாரதிராஜாவும் களத்தில் குதித்தார்!

Read Also -> கேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி

சென்னையில் இருந்து தனது மனைவி பார்வதி, மகள் மாளவிகா ஆகியோருடன் கேரளாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார் ஜெயராம். திருச்சூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 544-ல் குதிரன் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது, திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. மண் சரிந்து சாலையில் விழுந்தது. கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இதில் சிக்கிக்கொண்டன. ஜெயராம் காரும் சிக்கிக்கொண்டது. இதைய டுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடக்கன்சேரி போலீசார் விரைந்து வந்து அவர்களை பத்திரமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். 

Read Also -> வீட்டுக்குள் வெள்ளம்: சிக்கித் தவித்த தேசிய விருது பெற்ற நடிகர் மீட்பு! 

Read Also -> காயத்துடன் உதவி: அமலா பாலுக்கு குவியும் பாராட்டுகள்!

Read Also -> ரசிகர்களுக்கு ஒரேநாளில் விஜய்யும் அஜித்தும் ட்ரீட்?  

இந்நிலையில் நிலச்சரிவில் 18 மணி நேரம் சிக்கிக்கொண்டு தவித்ததாக நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘நிலச்சரி வில் சிக்கி தவித்தது கொடூரமானது. அந்த 18 மணி நேரம் அவஸ்தையானது. போலீசார் எங்களை பத்திரமாக மீட்டனர். மூன்று நாட்கள் போலீஸ் குவார்ட்டர்ஸில் தங்கியிருந்தோம். போலீஸ் துறைக்கு நன்றி. இப்போது முகாம்களில் உள்ளவர்களுக்கு தேவையான பொருட் களுடன் அங்கு செல்கிறோம். குழந்தைகளுக்கு தேவையான செர்லாக், பால் பொருட்கள், மருந்துகள், நாப்கின்கள் அதிகமாகத் தேவைப் படுகிறது. உதவி செய்பவர்கள் அதை கொடுங்கள்’ என்று உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close