[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

விஜய் சேதுபதியின் பெயர் 'ரசூல்'

mani-ratnam-s-next-flick-first-look-has-been-released

காற்று வெளியிடை' படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் திரைப்படம், 'செக்கச்சிவந்த வானம்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், மன்சூரலிகான், ஜோதிகா, இந்தி நடிகை அதிதி ராவ்,ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லைகா நிறுவனம்.  ‘செக்கச்சிவந்த வானம்’ வருகிற  செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி கதாப்பாத்திரங்களின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. அதில் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் பெயர் ரசூல், அருண் விஜய்க்கு "தியாகு", அரவிந்த் சாமியின் பெயர் "வரதன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சிம்புவின் பெயரும் ஃபர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close