[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

ஹன்சிகாவின் 50-வது பட டைட்டில் தள்ளிப்போனது ஏன்?

hansika-s-50th-film-titled-maha

ஹன்சிகா நடிப்பில் உருவாகும் 50-வது படத்துக்கு ‘மஹா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

’ஹவா’ என்ற இந்திப் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், ஹன்சிகா. தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஹன் சிகா, ’தேசமுத்ருடு’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தி, தெலுங்கில் நடித்து வந்த அவர் பின்னர், தனுஷின் ’மாப்பி ள்ளை’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். பிறகு விஜய்யுடன் ’வேலாயுதம்’, உதயநிதியுடன் ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ஆர்யாவுடன் ’சேட்டை’, சூர்யாவுடன் ’சிங்கம் 2’ உட்பட பல்வேறு படங்களில் நடித்த ஹன்சிகா 49 படங்களை முடித்துவிட்டார்.

இவரது 50-வது படத்தை முடிவு செய்திருக்கிறார் ஹன்சிகா. இதற்கு ‘மஹா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தத்தலைப்பை தனுஷ் தன து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ’மஹா’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜமீல். எக்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். செப்டம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. 

இந்தப் படத்தின் டைட்டில் கடந்த 9-ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக, டைட்டில் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close