[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்

ரொமானியாவில் பிரபாஸின் ’சாஹோ’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு!

saaho-team-headed-to-romania-to-shoot-the-last-schedule

பிரபாஸ் நடிக்கும் ’சாஹோ’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ரொமானியாவில் நடக்கிறது. 

’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ படங்களுக்காக 5 வருடங்களை செலவழித்த பிரபாஸ், இப்போது ’சாஹோ’வில் நடித்து வருகிறார். பிரமாண்ட ஆக்‌ஷன் படமான இதில் அவர் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் வில்லன்களாக நடிக்கின்றனர். மற்றும் மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். மதி ஒளிப்பதிவு செய்கிறார். ஷங்கர் -எஹசான் -லாய் இசை அமைக்கின்றனர்.

சுஜித் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்துக்காக, ’டை ஹார்ட்’, ’டிரான்ஸ் பார்மர்ஸ்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள கென்னி பேட்ஸ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சியை அபுதாபியில் கடந்த 60 நாட்களாக படமாக்கி வந்தனர். இதில் அருண் விஜய்யும் பங்குபெற்றார். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத வகையில் இந்த சண்டைக் காட்சி இருக்கும் என்று படக்குழு கூறியது. 

(ஸ்ரத்தா)

இப்போது இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து கடைசி கட்ட படப்பிடிப்பை ரொமானியாவில் நடத்த இருக்கின் றனர். இதற்காக பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் உட்பட படக்குழுவினர் டிசம்பர் மாதம் ரொமானியா செல்ல இருக்கின்றனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close