‘விஸ்வரூபம் 2’படத்திற்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் 22 இடத்தில் வெட்டு கொடுத்துள்ளதாக தலவல் கிடைத்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’. இந்தப் படம் நாளை வெளியாக உள்ளது. இதன் முதல் பாகம் இஸ்லாமிய தீவிரவாதத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது வெளியாகிறது. இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இதில் கமல்ஹாசன் ரா அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் பூஜா குமார், ஆண்ட்ரியா எனப் பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கைத்துறை 22 இடங்களில் கட்ஸ் கொடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் சிலரை மையப்படுத்தியுள்ள வசனங்களையும் நீக்கியுள்ளது. பல கட்ட தணிக்கைக்கு தீவிரமாக உட்படுத்திய பிறகு இதற்கு யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ‘விஸ்வரூபம்2’ படத்தை வெளியிட தடைவிதிக்க கோரி பிரமிட் சாய்மீரா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, இப்படத்துக்கு எதிரான மனுவை நீதிபதி சுந்தர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை, எவ்வித தடையும் இல்லாமல் நாளை உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாகிறது.
தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
இன்று உலக தாய்மொழி தினம் ! இந்தியாவில் மொழிகளின் நிலை என்ன ?
"தூக்குத் தண்டனை மட்டும் வேண்டாம், ஆயுள் முழுக்க ஜெயில்லயே இருக்கட்டும்" தஷ்வந்தின் தந்தை
200 அடி குழிக்குள் விழுந்த 6 வயது குழந்தை: மீட்பு பணி தீவிரம்
“கொலை மிரட்டல் விடுக்கிறார்”- பிக்பாஸ் தாடி பாலாஜி மீது புகார்