[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்.2இல் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
  • BREAKING-NEWS எம்எல்ஏ கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்தது எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது

என்றும் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் அஜித்

ajith-kumar-meets-karunanidhi-at-kauvery-hospital

அஜித் எப்போதும் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

அஜித்திற்கு எப்போதும் சாகசத்தில் ஈடுபாடு உண்டு. அவர் உடம்பில் அதற்கான அடையாளங்களை எப்போதும் பார்க்கலாம். சிலரை பேச்சுக்கு அயர்ன்மேன் என்பார்கள். ஆனால் அஜித் உண்மையில் அயர்ன்மேந்தான். அவர் உடம்பில் இருப்பு ப்ளேட் வைக்காத இடங்களே இல்லை. அவ்வளவு அறுவை சிகிச்சையை தாங்கிய உடம்பு அவர் உடம்பு. 

காலில் அறுவை சிகிச்சை, முதுக்கில் அறுவை சிகிச்சை, கைகளில் அறுவை சிகிச்சை என எத்தனை அறுவை சிகிச்சைகளை அவர் மேற்கொண்டிருக்கிறார் என்ற கணக்கு மருத்துவருக்கு தெரிகிறதோ இல்லையோ அவருக்கு அங்குளம் அங்குளமாக அத்துபடி. அவர் யாரை பார்த்தாலும் முதலில் விசாரிக்கும் வார்த்தை ‘வீட்ல எப்படி இருக்காங்க?’, ‘அம்மா, அப்பா செளக்கியமா?‘, ‘உடல்நிலை நல்லா இருக்கா?’ இப்படி எல்லா வார்த்தைகளும் உண்மையான விசாரிப்புக்களாகதான் இருக்கும். 

அவரிடம் உதவி என்று யாரும் போக தேவையில்லை. அவரது காதிற்கு யாராவது உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள் எனத் தெரிந்தால் அங்கே அவரது உதவி, முதல் உதவியாக இருக்கும். அவரது கண் மருத்துவர் விஜய் சங்கர் மூலம் 5 ஆயிரம் பேர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சைகள் செய்து கொடுத்துள்ளார் அஜித். அதை சமீபத்தில் ராதாரவி கூட கூறியிருந்தார். அஜித்தின் கருணை உள்ளத்தை வியந்துதான் ராதாரவி எப்போதும் அஜித்தை ‘அஜித் சார்’ என்று குறிப்பிடுவதாக சொல்லியிருந்தார். அதேபோல ராதாரவி அடிப்பட்டு கால் நடக்க முடியாமல் இருந்த போது அஜித் காலில் பயன்படுத்தும் உபகரணங்களை போலவே ஒரு உபகரணத்தை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் கொடுத்து விட்டுப்போனார் என்றும் ராதாரவி ஒரு பேட்டியில் கூறினார். 

ஷுட்டிங்க் ஸ்பாட்டில் அஜித் எப்போதும் ஒரு முதலுதவி உபகரணத்தை தயார்நிலையில் வைத்திருப்பார். ‘வேதாளம்’ படப்பிடிப்பில் அப்படிதான் ஒருவருக்கு விபத்து ஒன்று நடந்தது. அப்போது அஜித் உடனடியாக போன் செய்து ஸ்பாட்டிற்கு மருத்துவர்களை வரவழைத்துவிட்டார். வந்தவர் ஒரு மருத்துவர் அல்ல; நான்கு ஐந்து மருத்துவர்கள். அந்தளவுக்கு உடல்நிலைக்கு ஏதாவது ஒன்று என்றால் முக்கியத்துவம் கொடுப்பதில் அஜித் மனிதாபிமானம் மிக்கவர். 

ஆகவேதான் எந்தப் பொது விழாக்களிலும் கலந்துக் கொள்வதை தவிர்த்த அஜித், அரசியல் மேடை, சினிமா மேடை என பல மேடைகளை தவிர்த்த அஜித் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க வந்துள்ளார். அந்த மனிதாபிமானத்தை மனதில் வைத்துதான் அவரை அவரது ரசிகர்கள் ‘தல’ என்று தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close