[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS ராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“எனது நண்பர் பன்முக திறமையாளார்” - தனுஷை வாழ்த்திய ஷாரூக் கான்

shah-rukh-khan-praises-vada-chennai-teaser

தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷை, பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் பாராட்டியுள்ளார். 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வடசென்னை’. இந்தப் படம் ஒரு ப்ரீயட் ஃபிலிம். வடசென்னை மக்களின் ஒரு காலகட்ட வாழ்கையை பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா,  சமுத்திரகனி, ராதாரவி என பலர் நடித்துள்ளனர். 

கடந்த 28ம் தேதி தனது பிறந்த நாளையொட்டி படத்தின் டீசரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார். டீசர் வெற்றிமாறனின் ஸ்டைலை அப்படியே மீண்டும் நிரூபித்திருந்தது. 

தனுஷ் ‘பக்கா’ வடசென்னை மனிதராக உருவெடுத்திருந்தார். ‘ஒருத்தன் செத்தா முடியுற சண்டையாக்கா இது’ என குரூர மொழியில் தனுஷ் உச்சரிக்கும் டயலாக் ‘அஃமார்க்’ அடித்தட்டு மக்களின் குரலை பதிய வைத்திருந்தது. டீசரில் போலீஸ் கலவரத்தின் இடையே ‘திருப்பி அடிக்கலையினா இவங்க நம்மல அடிச்சு ஓடவிட்டுக்கிட்டே இருப்பானுங்க’ என்கின்ற வசனம் பல அரசியல் ‘பொடி’களை முன் வைத்திருந்தது.

டீசரில் ஹைலைட், ஐஸ்வர்யா ராஷேஷூம் தனுஷூம் அடிக்கும் லிப்லாக் சீன். கமலை ஓவர்டேக் செய்யும் விதமாக அது அமைந்திருந்தது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷின் டீசரை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், “எனது நண்பர் பன்முக திறமையாளர் தனுஷின் ‘வடசென்னை’ டீசர் ஆர்வத்தையும் மிகுந்த உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close