[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்

நான்காவது முறையாக விஜய்சேதுபதியை இயக்கும் இயக்குநர் 

vijay-sethupathi-and-seenu-ramasamy-to-team-up-once-again

விஜய்சேதுபதி நான்காவது முறையாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தலவல் வெளிவந்துள்ளது.

2010ம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்கற்று’ படத்தின் மூலம் நாயகனாக அடையாளம் காணப்பட்டவர் நடிகர் விஜய்சேதுபதி. இப்படத்தை சீனுராமசாமி இயக்கி இருந்தார். அந்தப் படம் பெரிய அளவில் வெற்றியடைந்தது.

மேலும் மூன்று தேசிய விருதுகளை பெற்றது. சிறந்த நடிகையாக சரண்யா பொன்வண்ணன் விருது பெற்றார். சிறந்த பாடலாசிரியர் விருதை வைரமுத்து பெற்றார். சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதை சீனு ராமசாமி பெற்றார். அதனை தொடர்ந்து ‘தர்மதுரை’ படத்தை இயக்கினார் சீனு ராமசாமி. அந்தப் படம் விஜய்சேதுபதி சினிமா வாழ்க்கையில் மாபெறும் ப்ளாக்பாஸ்டர் வெற்றியை பெற்றது. அதன் பிறகு ‘இடம் பொருள் ஏவல்’மூலம் மூன்றாவது முறையாக இணைந்தது இந்தக் கூட்டணி. ஆனால் அப்படம் வெளியாவதில் பல சிக்கல்கள் எழவே அது இன்னும் வெளியாகவில்லை. இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் சீனு ராமசாமி இயக்க உள்ள ஒரு புதிய படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதனை தயாரிக்கப் போவது வேறு யாரும் இல்லை. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாதான். இவர் ஏற்கெனவே அருண்குமார் இயக்கி, விஜய்சேதுபதி நடித்து வரும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். 

இவை தவிர, மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ‘சாயி ரா நரசிம்ஹ ரெட்டி’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ‘சீதக்காதி’, ‘96’ உள்ளிட்ட படங்களில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close