[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்

“ஒரு நடிகையாக வேற பரிமாணம் எடுத்திருக்கிறேன்” - வரலக்ஷ்மி

sandakozhi-2-new-stills-released-on-twitter-page

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சண்டக்கோழி2’ படத்தின் புதிய படங்களை வெளியிட்டுள்ளார்.

விஷாலின் 25 படம் ‘சண்டக்கோழி2’. இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராஜ்கிரண் எனப் பலர் நடித்துள்ளனர். இதனை விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி தயாரித்துள்ளது. 2005ம் ஆண்டு வெளியான ‘சண்டக்கோழி’ படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் எடுத்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தினை அக்டோபர் 18 அன்று திரையிட இருப்பதாக விஷால் தன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சண்டக்கோழி2’ படத்தின் சில புதிய படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் புடவைக் கட்டிக் கொண்டு யதார்த்தமாக இருக்கிறார். “ஒரு நடிகையாக ‘சண்டக்கோழி2’ பரிணாமம். மிக யதார்த்தமாக உணர்கிறேன். எனக்கு பலவிதமான கதாப்பாத்திரங்கள் கிடைத்துள்ளது பெரிய ஆசிர்வாதம். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் போதும் என் மீது அன்புகாட்டுகின்ற ரசிகர்களுடன், ஒரு பெரிய நன்றியை பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு கொடுக்கப்படும் பெரிய பாத்திரங்களை நான் தைரியமாக செய்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close