[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது? - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

‘ஜெண்டில்மேன்’ ஷங்கருக்கு 25ம் ஆண்டு விழா

shankar-s-assistants-felicitate-him-on-his-25th-anniversary

‘ஜெண்டில்மேன்’ வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததால் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் கூடி அவருக்கு விழா எடுத்துள்ளனர். 

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஷங்கர். பிறகு 1993ஆம் ஆண்டு ‘ஜெண்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். இந்தப் படம் ஜூலை 30 அன்று வெளியானது. அவர் இயக்குநராகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

‘ஜெண்டில்மேன்’ மிக பிரம்மாண்ட செலவில் கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை அடைந்தது. அர்ஜூன், வினித், மதுபாலா, எம்.என்.நம்பியார், கவுதமி, பிரபுதேவா, மனோரமா, கவுண்டமணி, செந்தில் என பலர் இதில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற பிரபுதேவாவின் ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு’ பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட் ஆகின. அன்று முதல் தமிழ் திரை உலகில் ‘மிஸ்டர் பிரம்மாண்டம்’ என கொண்டாடப்பட்டு வருகிறார் ஷங்கர். 

இந்நிலையில் அவரிடம் உதவி இயக்குநர்களாக வேலை பார்த்த பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், மாதேஷ், அறிவழகன், அட்லி எல்லோரும் சேர்ந்து குருநாதர் ஷங்கரின் 25ம் ஆண்டு விழாவை கொண்டாடியுள்ளனர். இது குறித்து இயக்குநர் அறிவழகன், “கடந்த மூன்று மாதமாக திட்டமிட்டோம். நாங்கள் அதை ஒரு சந்திப்பாக வைத்து எங்கள் இயக்குநரின் நினைவுகளை அசைபோட முடிவெடுத்தோம். நாங்கள் அவரிடம் சொன்னதும் ஒரு தேதி கொடுத்தார். எங்களது அதிருஷ்டம் அவர் 30ம் தேதி கொஞ்சம் ஓய்வாக இருந்தார். அன்றுதான் ‘ஜெண்டில்மேன்’ வெளியானது” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் நிகழ்ச்சிக்கான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு, “எனது உதவி இயக்குநர்களின் பாசத்தின் வெளிப்பாடு அதிகமானது. இவர்கள் இல்லாமல் எனது பயணம் இருந்திருக்காது” என்று கூறியிருக்கிறார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close