[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

தன்னை பற்றி பரவும் வதந்திக்கு தமன்னா விளக்கம்

it-s-rumours-says-tamannaah

நடிகை தமன்னா தன்னை பற்றி வெளியான செய்தி குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

தென்னிந்திய சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்து வருபவர் தமன்னா. அவர் குறித்து ஆங்கில வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. அவர் ஒரு மருத்துவரை அடுத்த வருடம் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக அந்தச் செய்திகள் கூறின. இந்தச் செய்தி குறித்து தனது காட்டமான விளக்கத்தை ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், “ஒருநாள் நடிகர். இன்னொருநாள் கிரிக்கெட் வீரர். இப்போது ஒரு டாக்டர்.

இப்படி என் திருமணம் பற்றி பல வதந்திகள். நான் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வரும் செய்திகளை நிச்சயம் ஊக்கப்படுத்துவதில்லை. அடிப்படை ஆதாரமற்ற இவ்வாறான செய்திகள் என் சொந்த வாழ்க்கை பற்றி வெளி வருகின்றன. நான் மிக சந்தோஷமாக தனியாக இருக்கிறேன். என் பெற்றோர்கள் மாப்பிளை வேட்டை நடத்தவில்லை. திருமணத்தை பற்றி நான் முடிவெடுத்தால் அந்தநாள் தெருவுக்கு வந்து நானே இந்த உலகத்திற்கு அறிவிப்பேன். தேவையில்லாமல் நீங்களே கற்பனை செய்து கொள்ளாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close