[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு

கருணாநிதியிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் விவேக்

youngsters-should-learn-from-karunanidhi-says-actor-vivek

திமுக தலைவர் கருணாநிதி மிகப்பெரிய ஆளுமை கொண்டவர்  இளைஞர்களெல்லாம் சுறுசுறுப்பை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

வீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என்றும் காவேரி மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நடிகர் விவேக் கூறியது " அரசியல்வாதி மட்டுமின்றி நல்ல கலைஞர், புலவர் என பன்முகம் கொண்டவர் விரைவில் அவர் நலம் பெற வேண்டும். நேரில் பார்க்கும் சூழல் இல்லாததால் இன்னும் சந்திக்க செல்லவில்லை.காவிரியை இயற்கை நமக்கு கொடுத்திருக்கிறது. வரும் நீரை வீணடிக்காமல் சேமித்து வைக்க வேண்டும்.  ரஜினி, கமல் அரசியலைப் பொறுத்தவரை நான் பொது மக்களாகவே இருக்கிறேன் தனியார் பள்ளிகளில் மட்டும்தான் நல்ல கல்வி கிடைக்கும் என்றில்லை. அரசுப் பள்ளிகளிலும் நல்ல கல்வி சூழல் வழங்கப்படுகிறது" என கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close