[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

மோகன்லாலை எதிர்த்து நான் கையெழுத்திடவில்லை: பிரகாஷ் ராஜ் மறுப்பு

prakash-raj-haven-t-signed-any-memorandum-against-mohanlal

நடிகர் மோகன்லாலை அரசு விழாவுக்கு அழைக்க கூடாது என வலியுறுத்தி எழுதப்பட்ட கடிதத்தில் தாம் கையெழுத்திடவில்லை என பிரகாஷ் ராஜ் மறுத்துள்ளார்.

கேரள மாநில அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. அதற்கு பிரபல நடிகர் மோகன்லாலை சிறப்பு விருந்தினராக அழைக்க கேரள அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் மோகன்லாலை அழைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மீறி அழைத்தால் விழாவினை புறக்கணிப்போம் என்றும் கூறி 105 நடிகர், நடிகைககள் கையெழுத்திட்டு முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தனர். 

இக்கடிதத்தில் பிரகாஷ் ராஜும் கையெழுத்திட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிவிருந்த நிலையில் அவரது விளக்கம் வெளியாகியுள்ளது.  மோகன்லாலை அரசு விழாவுக்கு அழைக்க கூடாது என வலியுறுத்தி எழுதப்பட்ட கடிதத்தில் தாம் கையெழுத்திடவில்லை என பிரகாஷ் ராஜ் டுவிட்‌டரில் மறுத்துள்ளார். மலையாள நடிகை பாலியல் கொடுமைக்குட்படுத்தப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைதாகியிருந்தார். இதைத்தொடர்ந்து அம்மா எனப்படும் மலையாள திரைப்பட நடிகர்கள் அமைப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரை மீ‌ண்டும் அந்த அமைப்பில் சேர்த்துக்கொண்டதாக கூறி அச்சங்கத்தின் தலைவர் மோகன்லாலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close