[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

தீபிகா படுகோனேவுக்கு மெழுகுச்சிலை !

deepika-padukone-s-wax-figurine-to-be-unveiled-at-madame-tussauds-london-in-2019

மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், தனது மெழுகுச்சிலை நிறுவப்பட இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தீபிகா படுகோன். அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர், கிட்டதட்ட ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் தனக்கு மெழுகுச்சிலை நிறுவப்பட இருப்பதாக அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தன்னுடைய  ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், லண்டன் மற்றும் டெல்லியிலுள்ள மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், தனது மெழுகுச்சிலை அடுத்த வருடம் நிறுவப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், இந்தியப் பிரபலங்கள் ஷாருக்கான், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோருக்கு மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தற்போது தீபிகா படுகோன் இணைந்துள்ளார். இதற்காக, அருங்காட்சியகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், சிலை வடிப்பதற்காக அவரை அளவு எடுத்துள்ளனர். முகபாவனைகள் கச்சிதமாக இருக்க, தீபிகாவைப் பல்வேறு கோணங்களின் புகைப்படங்களும் எடுத்திருப்பது வெளியாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close