[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்

‘சர்கார்’ விஜய்யுடன் மோதும் ஹாலிவுட் வில்லன்

is-johnny-tri-nguyen-vijay-s-villain-in-sarkar

விஜய்யுடன் ஹாலிவுட் வில்லன் ‘சர்கார்’ படத்தில் மோத உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஜானி டிரி நேகுயின் ஒரு அமெரிக்க ஆக்டர். இவரது நடிப்பை கண்டு வியந்துபோய் நிற்கிறது ஹாலிவுட். இவர் ஏற்கெனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஏழாம் அறிவு’ படத்தில் சூர்யாவுடன் மோதி இருப்பார். இவரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் முருதாஸ்தான். அந்தப் படத்தில் இவரது கண்களை பார்த்தாலே த்ரிலிங்காக இருந்தது. அவர் நடிப்பு பேசப்பட்ட அளவுக்கு அதிக படம் ஜானிக்கு தமிழில் கிடைக்கவில்லை. அதர்வாவின் நடிப்பில் வந்த ‘இரும்புக்குதிரை’ மட்டும் கிடைத்தது. 

இந்நிலையில் விஜய்யின் ‘சர்கார்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக ஜானி டிரி நேகுயின் களம் இறங்க இருக்கிறார் என செய்தி வெளியாகி உள்ளது. முருகதாஸுக்கு இவர் ஏற்கனவே அறிமுகம் உள்ளவர் என்பதால் செய்தி உண்மை என்றே கூறுகின்றது ‘சர்கார்’ வட்டாரம். வர்மக்கலை, ஸ்டெண்ட் என சகலகலா வில்லனாக ஜானி இருப்பதால் படத்தின் வெயிட்டேஜ் இன்னும் அதிகரித்துள்ளதாக சினிமா வட்டாரம் தகவலை தட்டி விட்டு வருகின்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close