[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

பிரம்மாண்ட மேடையில் ‘சர்கார்’ இசை வெளியீடு

sarkar-audio-launch-of-the-vijay-starrer-to-take-place-in-september

பிரமாண்டமான மேடையில் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டை நடத்த படக்குழுத் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்து வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படம் ‘சர்கார்’. இந்தப் படத்தை பற்றி அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாவது மிக குறைவு. ஆனால் சமூக வலைத்தளத்தில் இந்தப் படத்தை பற்றிய அப்டேட்ஸ் நொடிக்கு நொடி வெளியாகிக் கொண்டே இருக்கிறது. காரணம், வைரல் கண்டெண்ட் விஜய். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே பற்றிக் கொண்டது தீ. அவர் வாயில் சிகரெட்டை பற்ற வைக்க அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை தீ தானாக பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் மிக அமைதியாக படக்குழு சர்ச்சைகளை சமாளித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கள் ஏற்கெனவே 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் பாடல் காட்சிகளை படமாக்க அமெரிக்காவில் உள்ள லாஸ் வேஹஸ் போக உள்ளது படக்குழு. படத்தின் முழு வேலைகள் ஆகஸ்ட் மாத வாக்கில் முடிந்ததும் படக்குழு தீபாவளிக்கு படத்தை வெளியிட உள்ளது. ஆகவே இந்த வருடம் விஜய் ரசிகர்களுக்கு கலர்ஃபுல்லான தீபாவளியாக அமையும் என்பது உறுதி.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் இப்படத்தின் இசை விழாவை மிக பிரமாண்டமாக நடத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக விஜய்யின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றனர். சில வருடங்களாகவே தன் பட விழாக்களை பிரம்மாண்டமாக நடத்துவதை விஜய் தவிர்த்து வந்த நிலையில் ‘சர்கார்’ இசை விழா விமர்சையாக நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close