[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

த்ரிஷாவுடன் காதலை பொழியும் விஜய்சேதுபதி ‘96’ பட டீசர்

vijay-sethupathi-96-teaser-released

‘96’ படத்தின் டீசர் நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய்சேதுபதி, த்ரிஷா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘96’. இதில் விஜய்சேதுபதி 16 வயது, 36 வயது மற்றும் 96 வயது என மூன்று தோற்றங்களில் நடிக்கிறார். இதனை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்கி வருகிறார். இவர் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டது. மேலும் இப்படத்தின் டீசரை தற்போது விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டீசரில், விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் மழைச்சாரல் நனைந்தபடி உலா வருகிறார்கள். விஜய்சேதுபதி புகைப்படக்கலைஞராக சுற்றித் திரியும் காட்சிகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளன. மேலும் கோவிந்த் மேனன் இசைக் கோர்வை இதமான மனநிலையை எழுப்பும் படி உள்ளது. இருளும் ஒளியுமாக கலந்து வெளிப்பட்டுள்ள சி.பிரேம்குமார் ஒளிப்பதிவு சிறப்பாக பதிவாகியுள்ளது. படத்தினை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close