[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு

மேற்குவங்க ஆன்மிக மடத்திற்கு ரஜினிகாந்த் விசிட்

rajnikanth-visited-belur-math-yesterday-and-met-swami-smaranananda-maharaj

மேற்குவங்க மாநிலத்திலுள்ள ராமகிருஷ்ண மடத்தின் தலைவரை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆசி பெற்றார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மேற்குவங்க மாநிலம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 7 ஆம் தேதி இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆரம்பித்தது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி வில்லன் பாத்திரத்தில் ரஜினியுடன் முதன்முறையாக நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். மேலும் பாபி சிம்ஹாவும் நடிக்கிறார். அவர் தனது மகள் மற்றும் மனைவியுடன் ரஜினியோடு இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் சில வாரங்கள் முன்பு வைரலாக பரவியது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக மதுரை மற்றும் இமயமலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே இருநாட்கள் இடைவெளியிருப்பதால் சென்னை திரும்ப ரஜினி திட்டமிட்டார். இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் நவம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்படும் என்று இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதனை அடுத்து மேற்குவங்க ராமகிருஷ்ணர் மடத்தின் தலைவர் ஸ்மரனாநந்தா மகராஜை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து ஆசி பெற்றார். அதற்கான படங்களை ஏஎன்ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close