[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்

சாணக்கியராக மாறும் அஜய் தேவ்கன்...

ajay-devgn-teams-up-with-neeraj-pandey-for-chanakya

இந்திய வரலாற்றின் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரான சாணக்கியரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜய் தேவ்கன்.

சாணக்கியர் ஒரு சிறந்த போர் வீரர் மட்டுமல்லாமல் ஆசிரியர், பொருளாதார நிபுணர், அரசியல் ஆலோசகர் என பல்வேறு பரிமாணங்களில் தனித்திறமை கொண்டவராக திகழ்ந்தவர். சாணக்கியரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை பாலிவுட்டின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான நீரஜ் பாண்டே இயக்குகிறார்.

இது குறித்து அஜய் தேவ்கன், “சாணக்கியராக நடிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். நீரஜ் பாண்டேவின் படங்களை உற்று கவனித்திருக்கிறேன். இந்தப் படத்தையும் நீரஜ் பாண்டே மிக அழுத்தமாகவும் தெளிவாகவும் மக்கள் கண் முன்னே கொண்டுவருவார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 

ஸ்பெஷல் 26, பேபி, ரஸ்டம், எம்.எஸ்.தோனி போன்ற படங்களை இயக்கியவர் நீரஜ் பாண்டே. இந்தப் படத்தில் அஜய் தேவ்கனை சாணக்கியராக மக்கள் நேசிப்பார்கள் என  நீரஜ் பாண்டே தெரிவித்திருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close