[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

டி.ராஜேந்தரின் ’இன்றையக் காதல்டா’

t-rajenders-new-movie-titled-as-a-indraiya-kadhal-da

நீண்ட இடைவெளிக்குப் பிறகு டி.ராஜேந்தர் இயக்கும் படத்துக்கு ’இன்றைய காதல் டா’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செல்லப்பிள்ளையாக இருக்கும் டி.ஆர், ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். அவர் இயக்கிய, ஒரு தலைராகம், ரயில் பயணங்களில், தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா, மைதிலி என் காதலி உட்பட பல படங்கள் சூப்பர் ஹிட்டானவை. அதே போல அவர் இசையில் உருவான பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் பரபரப்பாகச் சென்று சேர்ந்தவை. இன்றும் அந்தப் பாடல்கள் ரசிகர்களை கட்டிப்போடுகின்றன. 

’வீராசாமி’க்குப் பிறகு படம் இயக்குவதை நிறுத்தியிருந்த டி.ஆர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கிய ’கவண்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் படம் இயக்குகிறார், டிஆர். அவர் இயக்கும் படத்துக்கு, ’இன்றையக் காதல்டா’ என்று டைட்டில் வைத்துள் ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நமீதா லேடி டானாக நடிக்கிறார். சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இதில் ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், ரோபோ சங்கர், பாண்டு உட்பட பலர் நடிக்கின்றனர். ஏராளமான புதுமுகங்களையும் அறிமுகம் செய்கிறார் டி.ஆர்.

வழக்கம் போல கதை, திரைக்கதை வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை டி.ராஜேந்தரே ஏற்றுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close