[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

சன்னி லியோன் எனும் நான்....!

sunny-s-documentary-trailer-traces-rollercoaster-journey-of-karenjit-kaur

பாலிவுட்டில் இப்போதும் எப்போதும் 'பையோ பிக்' படங்களுக்கு மவுசு அதிகம். அதற்கு சமீபத்திய உதாரணம் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் நடிகர் சஞ்ஜய் தத் வாழ்கை குறித்து வெளியான "சஞ்சு" படம் சக்கைப் போடு போட்டு வருகிறது. இந்தப் படம் வெளியான ஒரே வாரத்தில் ரூபாய் 200 கோடி வசூல் செய்தது. இதற்கு முன்பு மகேந்திர சிங் தோனி, குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் வாழ்க்கை என சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்போது கூட பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல் குறித்து திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் சிலவற்றை தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் பாலிவுட் நடிகை சன்னி லியோனின் வாழக்கை குறித்தும் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு "கரன்ஜீத் கவுர் - தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்" (Karenjit Kaur - The UnTold stroy of Sunny Leone) என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியிடப்பட்டு ஒரே நாளில் 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சன்னி லியோன் புகழ்ப்பெற்ற ஆபாசப் படங்களின் நாயகியாக வலம் வந்த பின்பு, பாலிவுட் திரையுலகில் பல்வேறு போராட்டங்களை கடந்து நடித்து வருகிறார்.

அவரைப் பற்றிய படத்தின் டிரைலர் என்பதால் இதற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் சன்னி லியோனே நடித்தள்ளுதால், கூடுதல் எதிர்பார்ப்பு இப்போதே கூடத் தொடங்கியுள்ளது. இத்திரைப்படத்தில் கனடாவில் சன்னி லியோன் வளர்ந்த விதம், அவரின் பதின்ம பருவம், ஆபாசப் பட உலகில் நுழைந்தது எப்படி அதற்கான காரணங்கள் என்ன என்பதை உண்மைக்கு அருகில் இருந்து பேசப்படும் என கூறப்பட்டுள்ளது.

சன்னி லியோனுக்குள் ஆரம்பத்திலிருந்தே பாலிவுட்டில் ஹீரோயினாக புகழ் பெற வேண்டும் என்ற ஆசைதான் பல்வேறு திசைகளில் தான் சுற்றித் திரிந்து இறுதியாக பாலிவுட்டுக்கு வந்த காரணம் என்று அவரே பலப் பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இந்தப் படத்தை பார்த்த சன்னி லியோன் ஆயிரம் முறை கதறி அழுதேன் என ட்விட் செய்துள்ளார்.

மேலும், என் வழியில் செய்த சில விஷயங்கள் நினைத்து வருத்தப்படுகிறேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் சன்னி லியோனின் ரியல் லைஃப் கணவரான டானியல் வெப்பரும் நடித்துள்ளார். துரதிஷ்டவசமாக இந்தப் படம் பெரிய திரையில் வெளியாகாது.

ஜூலை 16 ஆம் தேதி ஜீ5 செயலியில் ஒளிப்பரப்பட உள்ளது. பின்பு, வரவேற்பை பொருத்து பெரிய திரையில் விரைவில் கரன்ஜித் கவுர் எனும் சன்னி லியோனை நாம் பார்க்கலாம். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close