[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

பிரபல இயக்குனர் தியாகராஜன் காலமானார்!

movie-director-r-thiyagarajan-passes-away

பிரபல இயக்குனரும் சாண்டோ சின்னப்பாத்தேவரின் மருமகனுமான ஆர். தியாகராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது. 75

ரஜினிகாந்த் நடிப்பில், தாய் மீது சத்தியம், தாய்வீடு, அன்புக்கு நான் அடிமை, ரங்கா உட்பட 11 ஹிட் படங்களை இயக்கியவர் ஆர்.தியாகராஜன். மேலும், வெள்ளிக்கிழமை விரதம், தாய் இல்லாமல் நானில்லை, ஆடுக்கார அலமேலு உட்பட மொத்தம் 28 படங்களை இயக்கியுள்ளார். சாண்டோ சின்னப்பா தேவரின் மூத்தமகள் சுப்புலட்சுமி, இவர் மனைவி. சென்னை போரூரில் வசித்து வந்த இவருக்கு இன்று காலை திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.  ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு நாளை காலை நடக்கிறது. 

மறைந்த தியாகராஜனுக்கு வேல்முருகன் என்ற மகனும் சண்முகவடிவு என்ற மகளும் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close