[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

‘அம்மா’ மீது நடிகைகள் தொடர் புகார்: மவுனத்தை கலைத்தார் மோகன்லால்

mohanlal-dissolved-his-silence-for-actor-dilip-case

‘அம்மா’வில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் தனது மவுனத்தை கலைத்துள்ளார் அதன் தலைவர் மோகன்லால்.

மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ (Association of Malayalam Movie Artists) . இதன் புதிய தலைவராக மோகன்லால் சமீபத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில் சிக்கிய பிரபல நடிகர் திலீப் ‘அம்மா’வில் மீண்டும் சேர்க்கப்பட்டார். கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கிய நேரத்தில் திலீப் அந்த அமைப்பிலிருந்து விலக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட  நடிகை அந்த அமைப்பிலிருந்து உடனடியாக விலகினார். எனவே அந்த நடிகைக்கு ஆதரவாக அவரின் தோழியான மற்ற மூன்று நடிகைகளும் ‘அம்மா’விலிருந்து வெளியேறினர். ‘அம்மா’ பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்பதே அவரின் குற்றச்சாட்டு ஆகும். ‘அம்மா’விலிருந்து விலகிய நடிகைகளுக்காக சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. அதேபோல ‘அம்மா’வின் தலைவராக உள்ள மோகன் லாலுக்கும் எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன.

 

இந்நிலையில் ‘அம்மா’வில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் இறுதியாக தனது மவுனத்தை கலைத்துள்ளார் அதன் தலைவர் மோகன்லால். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ கடந்த 26-ம் தேதி நடைபெற்ற அம்மாவின் வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் நடிகர் திலீப்பை ஒருமனதாக சேர்க்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் நடிகர் திலீப் போலீசாரால் கைது செய்யப்பட்டவுடன் உடடினயாக ‘அம்மா’விலிருந்து வெளியேற்றப்பட்டார். இது ஜனநாயகப்பூர்வமானது. ஆனால் இப்போது பொதுக்குழு கூட்டத்தில் திலீப் மீதான தடையை நீக்க எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர். ‘அம்மா’ எப்போதுமே அதன் ஜனநாயக அடிப்படையில் ஒருமித்த குரல் பக்கமே நிற்கிறது. திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டது தொடர்பாக அலுவலக ரீதியாக இன்னும் அவரிடேமே தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள் ஊடகங்கள் இதனை ‘அம்மா’விற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.

நாங்கள் மதிக்கும் பலரும் உண்மை நிலவரம் எதுவென்று தெரியாமலேயே அதனை எதிர்க்க ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமில்லாமல் எங்களின் உருவ பொம்மைகளும் எரிக்கப்படுகின்றன. ஆனால் ‘அம்மா’ அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பொதுக்குழு கூட்டத்தில் ‘அம்மா’வின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கவில்லை. ஆனால் அதன்பின் அவர்கள் தங்களது எதிப்பு குரலை பதிவு செய்து வெளியேறியுள்ளனர். எனவே அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு குறித்து ஆராய ‘அம்மா’ தலைமை தயாராகவே உள்ளது. மாறுபட்ட கருத்துகளையும் நாங்கள் ஏற்க தயாராகவே உள்ளோம். ‘அம்மா’வை அழிக்க நினைப்பவர்களை பற்றி நாங்கள் எதுவும் கவலைப்படவில்லை. அவர்களை நாங்கள் புறக்கணிக்கிறோம்” என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ‘அம்மா’ சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் தற்போது மோகன் லால் விளக்க கடிதம் கொடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close