[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: கமல்ஹாசன்

kamal-hassan-welcoming-actor-vijay-for-politics

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியதோடு, அதன் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். இதேபோல் நடிகர் ரஜினிகாந்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். சினிமா துறையில் சம பலம் வாய்ந்தவர்கள் இனிமேல் அரசியல் களத்திலும் மோதி பார்க்க உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் பொதுமக்களின் கேள்விகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் சசிகுமார் என்ற நபர், “ உங்கள் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீர்களா” என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “ எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன். அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி. எனக்கு மட்டுமல்ல.. அனைவருக்குமே பிடித்த தம்பி. கண்டிப்பாக வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close