[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

ஒரே சண்டை... குடும்பச் சண்டையாக மாறிய பிக்பாஸ் 2..!

family-fight-in-bigboss-two

பிக்பாஸ் 2  நிகழ்ச்சி கிட்டத்தட்ட குடும்பச் சண்டையாகவே மாறியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். இதுவரை எந்தவொரு போட்டியாளரும் எலிமினேட் செய்யப்படவில்லை. எனவே நாளுக்கு நாள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் அதிகரித்து வருவதால் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில், நித்யா பேசுவது போல் உள்ளது. அதில் “ ஒரு ஆணுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்றால் மனைவிக்கு தெரியாமல் கூட குடிப்பார்கள். ஆனால் மனைவிக்காக அதனை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்” என நித்யா கோபத்துடன் பேசுகிறார். அதற்கு பதிலடியாக பேசும் பாலாஜி, நித்யாவை டாப்பிக் தெரிந்துகொண்டு பேசும்படி சொல்கிறார். தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. ஏற்கனவே பாலாஜியும், நித்யாவும் திருமணமாகி விவாகரத்திற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் 2-வில் அவர்களின் குடும்பச் சண்டையே அதிகமாக காணப்படுகிறது. இதேபோல மற்றொரு ப்ரோமோ வீடியோவில், மகத் தன் பழைய காதல் குறித்து உருக்கமாக பேசுகிறார். தான் ஏற்கனவே ஒரு பெண்ணை மனதார நேசித்ததாகவும், ஆனால் அந்தப் பெண் தன்னை விட்டு விலகிச் சென்றுவிட்டதாகவும் சோகத்துடன் பாடல் பாடுகிறார். அப்போது யாஷிகா ஆனந்தும் கண் கலங்குகிறார். இதுபோன்று அந்த ப்ரோமோ வீடியோ அமைந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close