[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

பட வாய்ப்புக்காக சமரசம் செய்யாதீர்! தீபிகா அட்வைஸ்

shocking-deepika-padukone-reveals-she-was-advised-to-get-a-boob-job-early-in-her-career

பத்மாவத் படம் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தான் இந்தப் படம் வெளியானது. தீபிகாவுக்கும் இந்தப்படத்தில் நடித்ததற்காக பல்வேறு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. தடைகளை கடந்து இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. 

தீபிகா பாலிவுட்டில் இன்று உச்சநட்சத்திரம் இந்த உயரத்திற்கும் பல்வேறு தடைகளை தாண்டிதான் வந்துள்ளார். சினிமாவில் தனது ஆரம்ப காலம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பெரிய மார்பகங்கள் இருந்தால் தான் பாலிவுட் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் ஈர்க்க முடியும் அதனால் மார்பகங்களை செயற்கையாக பெரிதாக்கிக்கொள்ள சிலர் ஆலோசனைகள் வழங்கினர். நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ அதை அடைவதற்கு இது எளிதான வழி என்றனர். ஆனால் நான் அப்படிப்பட்ட நபர் இல்லை; படவாய்ப்புகளுக்காக நான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. ஆரம்ப காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். அதில் இருந்து மீண்டுவிட்டேன். இல்லை என்றால் தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றிருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close