[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி

“ஒரு ஹீரோவால் பட வாய்ப்பு கை நழுவிப் போனது”- மஞ்சுமா மோகன் வைத்த பஞ்ச்

people-have-been-telling-me-that-losing-weight-will-do-wonders-to-my-career-manjima

‘தள்ளிப் போகாதே’ பாடலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. மஞ்சுமா மோகனுக்கும் சிம்புவிற்கும் அந்தளவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் ‘அச்சம் என்பது மடமையடா’. பெரிய அளவுக்கு பேசப்பட்ட அவர் பேச்சு மூச்சே இல்லாமல் மெளனமாகி போனார். என்ன ஆனது அவருக்கு? ஏன் அதிகம் அவர் தமிழில் கவனம் செலுத்தவில்லை. இப்படி பல பேச்சுக்கள், சந்தேகங்கள். இப்போது பல கதைகளுக்கு அவரே பதில் கொடுத்திருக்கிறார். 

மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பி இருக்கிறீர்கள். தமிழ்ப் படங்களை நீங்கள் ஏற்று கொள்ளாததற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?

“அப்படி எந்தக் காரணமும் இல்லை. நான் மிகச் சிறப்பானதை எதிர்பார்க்கிறேன் என மக்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை. ‘அச்சம் என்பது மடமையடா’ வெளியானதற்கு பிறகு என மூன்று வாய்ப்புக்கள் கிடைத்தன. அந்த மூன்று வாய்ப்புக்களும் மிகப் பெரிய வாய்ப்புக்கள். நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். மூன்று வாய்ப்பு சம்பந்தமாகவும் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த மூன்று படங்களும் நிச்சயம் என்ற அளவுக்கு போனது. ஆனால் அடுத்தடுத்து அந்த மூன்று வாய்ப்புக்களும் கைவிட்டு போனது. ஒரு படத்தை இழந்ததற்கு பின்னால் நடிகர் ஒருவர் இருந்தார். இன்னொரு படத்தை இழந்ததற்கு காரணம் வேறு. பெரிய டைரக்டர், பெரிய நடிகர் படம் அது. டைரக்டருக்கு என்னுடன் வேலை செய்ய விருப்பம். நடிகரும் விரும்பினார்.

ஆனால் மூன்று நாள் கழித்து என் மேனேஜருக்கு டைரக்டர் போன் பண்ணார். ‘என் முன்னால் ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. தயாரிப்பாளர் வேறு நடிகையை நடிக்க வைக்க விரும்புகிறார்’ என்று சொல்லிவிட்டார். எனக்கு வந்த மூன்றாவது வாய்ப்பு உறுதியாகும் அளவுக்கு போனது. நானும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு தேதியையும் கொடுக்க போய்விட்டேன். டைரக்டர் ‘எனக்கும் தயாரிப்பாளருக்கும் ஓகே.. ஆனால் நடிகர் பெரிய நடிகை இருந்தால் நன்றாக இருக்கும்’ என நினைக்கிறார் என்றார். ஆகவே அதுவும் போய்விட்டது. என் கேரியரையே இந்த விஷயங்கள் இப்போது மாற்றிவிட்டது. ஆனால் என்னால் மாற முடியவில்லை. ஏனென்றால் இது என்னுடைய தவறுகள் கிடையாது. ‘குயின்’ படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்கிறார்கள். அதன் தலைப்பு ‘ஸம் ஸம்’. அதில் நடிக்க இருக்கிறேன். பிரான்சில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடிக்க உள்ளது.” 

தேவராட்டம் படத்தில் நீங்கள் எப்படி வந்தீர்கள்?

“திடீரென்று நடந்தது. நான் எந்தத் தமிழ் படத்திலும் கடந்த ஒரு வருடமாக ஒப்பந்தமாகவில்லை. நான் எந்த வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. ஒரு நாள் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மேசேஜ் அனுப்பினார். முத்தையா பேச விரும்புகிறார் என கூறியிருந்தார். அவரும் பேசினார். ‘நாங்க எங்க படத்தில் நீங்க இருக்கனும்ணு விரும்புகிறோம். ஆனால் உங்கள் தோற்றம் இப்போது எப்படி இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. நாங்கள் பார்ப்பதற்காக உங்களின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை அனுப்புங்கள்’ என்றார். நான் என் புதிய படங்களை அனுப்பி வைத்தேன். உடனே அவர் வந்து கதையை சொன்னார்.

ஆனால் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட வேண்டாம் என இருந்தேன். ஏனென்றால் அவர் தனது ‘கொடிவீரன்’ படத்திற்கு கூட பேசினார். அப்போது நான் ‘சத்ரியன்’ செய்து கொண்டிருந்தேன். ஆகவே முடியாமல் போனது. தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் வலைதளத்தில் என் படத்தை தேடுவார்கள். உடனே புதிய படம் கேட்டு மெசேஜ் அனுப்புவார்கள். அது வழக்கமானதுதான். அதே போல செய்யவில்லை முத்தையாவும் ஞானவேல்ராஜாவும். அவர்கள் என்னை கொஞ்சம் உடல் எடையை குறைக்க சொன்னார்கள். நானும் அதை காரணமாக வைத்து என் எடையை குறைக்க முடிவு செய்தேன்.”

முத்தையா நீங்கள் பருமனாக இருக்கிறீர்களா என பார்க்க வேண்டும் என்பதற்காகவே புகைப்படங்களை கேட்டிருக்கிறார். சினிமா துறை நடிகைகள் எல்லோரும் ஒன்றுபோலவே இருக்க வேண்டும் என எதிர்ப்பாக்கிறதா?

“இல்லை. நடிகைகள் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. அது கதாபாத்திரத்தை பொருத்தது. இது ஒரு எடுத்துக்காட்டு. முத்தையாவின் படங்கள் பெரும்பாலும் கிராம பின்புலத்தை கொண்டுள்ளன. அவரது படங்களுக்கு பருமனான நடிகைகள் பொருந்தமாட்டார்கள். அவர் பார்த்தது என் பழைய படங்களை. என் புதிய படங்களை பார்த்த பின்பு அவர் நான் சரியாக இருப்பதாக கூறினார். நான் ஒரு வருடமாக தமிழ்ப் படம் நடிக்கவில்லை. என் தோற்றம் எப்படி உள்ளது என்பதை பலரும் பார்க்க முடியவில்லை. பொது விழாக்களிலும் என் தோற்றத்தை பார்க்க வாய்ப்பில்லை. ஆகவே அவர்கள் என் சரியான தோற்றத்தை எப்படி பார்க்க முடியும்?” என்று மிக வெளிப்படையாக பேசி இருக்கிறார் மஞ்சுமா.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close