[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

விஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் முதல் தீம் மியூசிக்

a-r-rahman-makes-for-sarkar-theme-music

ஏ.ஆர். ரஹ்மான் ‘சர்கார்’ படத்திற்காக தீம் மியூசிக் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்திற்கான இரண்டு பாடல்களை முழுவதுமாக இசையமைத்து ரஹ்மான் கொடுத்துவிட்டார். அதற்கான காட்சிகளையும் படக்குழு படமாக்கிவிட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் ரஹ்மான் முதன்முறையாக விஜய்க்காக தீம் மியூசிக் ஒன்றை உருவாகி இருக்கிறார். இதுவரை ரஹ்மான் ‘உதயா’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘மெர்சல்’ என மூன்று படங்களுக்கு இசையமைத்திருகிறார். ஆனால் தனியாக விஜய்க்கு தீம் மியூசிக் போட்டது கிடையாது. ‘மெர்சல்’ படத்தில் கூட தனது வழக்கமான பாணியை மீறி ‘ஆளப் போறான் தமிழன்’ என்ற வரிகளை அமைத்திருந்தார். அந்த மாற்றம் அவரது இசை வாழ்வில் முக்கியதமானதாக கருதப்படுகிறது. இவர் ‘சர்கார்’ படத்தில் அமைக்கும் தீம் மியூசிக் காட்சிகள் அமெரிக்காவில் படமாக்க பட உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close