[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்

படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஜய் வசந்த் கால் முறிந்தது

actor-vijay-vasanth-injured

’மைடியர் லிசா’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் வசந்தின் கால் முறிந்தது.

விஜய் வசந்த், லீசா, மயில்சாமி, சாமிநாதன் உட்பட பலர் நடிக்கும் ’மைடியர் லிசா’.  ரஞ்சன் இயக்கும் இந்த திகில் படத்தின் ஷூட்டிங் ஊட்டி யில் நடந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் சண்டைகாட்சி படமாக்கப்பட்டது. விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் காட்சி படமாகிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அவரது கால் பள்ளத்தில் சிக்கியது. இதில் தடுமாறி விழுந்தார் அவர். காலில் கடும் வலி ஏற்பட் டதால் அவரால் எழுந்துகொள்ள முடியவில்லை.

(லீசா)

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மூன்று வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்ததால் சென்னை வந்தார். அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதன் காரணமாக மைடியர் லிசா படத்தின் ஷூட்டிங் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close