[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் தளபதிக்கு பிறந்தநாள் !

actor-vijay-the-box-office-king-of-tamil-film-industry-celebrates-birthday-today

ரசிகர்களால் இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். என்றும் இளமை, எப்போதும் எளிமை என்பதே விஜயின் அடையாளம். இவருக்கு லட்சக் கணக்கான ரசிகர்கள் இருப்பதற்கு காரணமும் இதுதான். தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குநர் என்பதால் விஜய் எளிதில் திரைத் துறைக்கு வந்து கதாநாயகனாகிவிட்டார் என பலரும் இவரை ஏளனம் செய்பவர் பலர். தந்தை இயக்குநராக இருந்ததால் விஜய் ஹீரோவாக உருவானர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, ஏன் இதை விஜய் கூட மறுக்கமாட்டார்.

ஆனால் வெற்றிகரமான கதாநாயகனாக மாறுவதற்கு விஜய் மட்டுமே காரணம். விநியாகஸ்தர்களின் மினிமம் கியாரண்டி ஹீரோவோக விஜய் பரிமாணம் பெறுவதற்கு அவர் கடந்து வந்த பாதையும், பெற்ற தோல்வியும் கொஞ்ச நஞ்சமல்ல. கல்லடி பட்ட மரம்தான் காய்காக்கும் என்ற பழமொழி உண்டு.

விஜய் கல்லடி பட்டுதான் இப்போது ஆலமர விருட்சமாய் வளர்ந்து நிற்கிறார். விஜயின் முதல் படம் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு. ஆனால் விக்ரமன் இயக்கிய "பூவே உனக்காக" படம்தான் விஜயின் முதல் வெற்றிப் படமாக அமைந்து, அவரின் திரையுலக வாழ்வை திருப்பிப் போட்டது. ஆனால் அதன் பின்பும் சரியாக படங்களை தேர்வு செய்ய முடியாமல் விஜய் திண்டாடினார்.

பூவே உனக்காக வெற்றிக்கு பின்பும் "மாண்புமிகு மாணவன்", காலமெல்லாம் காத்திருப்பேன் என தோல்வி படங்களை கொடுத்தார். பின்பு,  "லவ் டுடே" என்ற மெகா ஹிட் கொடுத்து, திரும்ப தன்னுடைய கேரியர் கிராஃபை உயர்த்தினார், விஜய்க்கான மார்க்கெட் தயாரிப்பாளர்கள் மத்தியில் உயர்ந்தது. இதன் பின்பு நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். அவ்வப்போது வெற்றி அவ்வப்போது தோல்வி  என்றாலும் விஜய் எப்போதும் மீண்டு வருவதில் தவறியதே இல்லை.

விஜயின் சினிமா வாழ்க்கையிலேயே காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, ப்ரியமாணவளே, ப்ரண்ட்ஸ், பகவதி, கில்லி, துப்பாக்கி, கத்தி, மெர்சல் ஆகியவை மிகப் பெரிய வசூலைக் குவித்த படம். விஜய் என்றாலே காதல் படம் இல்லை சண்டை படமாக இருக்கும் என்ற பொதுவான எண்ணத்தை மாற்றி இவர் நடித்த படம்தான் "நண்பன்".

பின்பு, இப்போதெல்லாம் விஜய் தனது படங்களில் சூடான அரசியல் வசனங்களையும் சேர்த்து பேசி வருகிறார். இதற்கு உதாரணமாக மெர்சல் படத்தில் விஜய் பேசிய சில வசனங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், விஜய் இது குறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

விஜய்யின் திரைப்பயணத்திலேயே மிகவும் மோசமான காலம் 2007 இல் தான் தொடங்கியது, அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என தொடர்ந்து 5 தோல்வி படங்களை கொடுத்து மிகவும் மார்க்கெட் வீழ்ச்சியில் இருந்தார். ஆனால் அப்போதும் விஜய் தனது தோல்விப்படங்கள் குறித்து வாய் திறக்காமல் இருந்ததுதான் விஜயின் பலம்.

அந்த மெளனத்தின் வெற்றியைதான் விஜய் இப்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறார். விஜய் நாளை கூட மீண்டும் ஒரு தோல்வியை சந்திக்கலாம், ஆனால் அதுதான் நிரந்தரம் என்று அவரை வெறுப்பவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் மீண்டும் வெற்றிப் பெறுவார், அதுதான் விஜய். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close