[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

’லென்ஸ்’ இயக்குனர் படத்தைத் தயாரிக்கிறார் ஸ்ருதி

shruti-haasan-to-present-lens-director-s-next

இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். 

நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே, இஸிட்ரோ மீடியா சார்பில் படத் தயாரிப்பிலும் ஈடுபடுகிறார். இந்நிறுவனம் மூலம் ’லென்ஸ்’ படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் அடுத்த படமான  ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’யை தயாரித்து வெளியிடுகிறார்.

படம் பற்றி ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘நான்கு நண்பர்களின் கதை மூலம் இந்த சமூகம் எப்படி பழங்கால மரபுகளின் வீழ்ச்சி யையும், நவீனத்தின் எழுச்சியையும் எதிர்கொள்கிறது என்பதை சொல்கிறோம். உலகம் முழுவதுக்குமான கதை இது. இந்தப் படம் பற்றி சரிகா மேடத்திடம் ஐந்து நிமிடம்தான் பேசினேன். அவர்களே தயாரிக்க முன் வந்தனர்’ என்றார். 

ஸ்ருதிஹாசன் கூறும்போது, ‘ இந்த இயக்குனரின் முந்தைய படைப்பான லென்ஸை பார்த்து வியந்தோம். எளிய கதைகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்துவதில் அவரின் பார்வை ஆச்சரியமாக இருந்தது. இதையடுத்து இந்தப் படத்தின் கதையை கேட்டதும் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தோம்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close