[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

‘புலி முருகன்’ஆக்‌ஷன் கிங் ரஜினி படத்திற்கு ஒப்பந்தம் 

stunt-choreographer-peter-hein-on-board-for-rajinikanth-s-next

ரஜினிகாந்த்தின் படத்திற்கு ஸ்டெண்ட் மாஸ்டராக பீட்டர் ஹெய்ன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மலையாள நடிகர் மோகன் லால் நடித்த ‘புலி முருகன்’ படத்தில் இடம் பெற்ற ஸ்டெண்ட் காட்சிகள் உலகத்தரத்தில் இருந்தன. அப்படத்தில் மோகன் லால் புலியுடன் சண்டையிடும் காட்சிகளை கண்டவர்கள் கண்களை அசைக்காமல் அப்படியே பார்த்து வியந்தனர். அந்தளவுக்கு தனது திறமைகளை காட்டி இருந்தார் ஸ்டெண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். பலரும் எதிர்பார்த்ததைபோலவே அவருக்கு அந்தப் படத்தி்ன் சண்டைகளை வடிவமைத்ததற்காக தேசிய விருது கிடைத்தது. வடிவமைக்கும் சண்டைக்காட்சிகளில் தனக்கென தனி அடையாளத்தை பதித்த ஆக்‌ஷன் எக்ஸ்பெர்ட்  பீட்டர் ஹெய்ன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ரஜினிகாந்த் படத்திற்கு சண்டை பயிற்சியாளரக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளதால் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே வெளியான ரஜினிகாந்தின் ‘எந்திரன்’,‘சிவாஜி’,‘கோச்சடையான்’ என சில படங்களுக்கு ஸ்டெண்ட் மாஸ்டராக பீட்டர்  பணியாற்றியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் படத்தில் தேசிய விருது வாங்கிய கேமிராமேன் திருநாவுக்கரசு ஏற்கெனவே ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருடன் மேலும் ஒரு தேசிய விருது பெற்றவரான பீட்டரும் இணைந்திருக்கிறார். இவர் ரஜினியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close