[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

“நீக்கப்பட்ட பதிவை ஸ்கீரின்ஷாட் எடுத்து பரப்புகிறார்கள்”- நடிகை கஸ்தூரி வேதனை

actress-kasthuri-on-transgender-remarks-issue

திருநங்கைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட விவகாரத்தில் நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் வெளியான தீர்ப்பை வைத்து, திரைப்பட நடிகை கஸ்தூரி திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக  சர்ச்சைக்குரிய கருத்தை தனது ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். அவரது சமூக வலைத்தள கருத்துக்கு திருநங்கைகள் பலரும் தங்களது  கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்த கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பகிரங்க மன்னிப்பு கேட்டு நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2 நாட்களுக்கு முன்னதாக வேடிக்கையாக பேசுவதாக எண்ணி மிகவும் தவறான ஒரு ட்வீட்டை பதிவு செய்து விட்டேன். அதனால் நாம் மிகவும் மதிக்கும் என்னுடைய நண்பர்கள், சகோதர, சகோதரிகளின் மனது வேதனைப்படுகிறது என்பதை அறிந்த உடனேயே அந்த ட்வீட்டை நான் நீக்கிவிட்டேன். பகிரங்கமாகவும் மன்னிப்பும் கேட்டுவிட்டேன். நான் எல்ஜிபிடி சமுதாய மக்களிடம் நேரடியாகவே விளக்கத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளேன். சமூக வலைத்தளங்களிலும் நேரடியாகவே திருநங்கைகளிடம் வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பு கேட்டு உள்ளேன். அவர்களும் என்னை பெருந்தன்மையாக மன்னித்து இதனை கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் நீக்கப்பட்ட பதிவை ஸ்கீரின்ஷாட் எடுத்து பரப்புவதால் உண்மைக்கு புறம்பான சர்ச்சையாக இது மாறுகிறது. மீண்டும் மீண்டும் இந்த ஸ்கீரின்ஷாட்டை பரப்புவதால் என்னுடைய சகோதர சகோதரிகளை கொச்சைப்படுத்தி காயப்படுத்துகிறீர்கள். என்னுடைய மனதையும் காயப்படுத்துகிறீர்கள். நான் மனுஷிதான். மறுபடியும் நான் தவறு செய்வேன். தவறு செய்யாமல் யாரும் இருக்க மாட்டார்கள். அப்போது என்னை நீங்கள் கேள்வி கேளுங்கள். இப்போது நான் செய்தது தவறுதான். இதை விட்டுவிடுங்க. என்னோடு சேர்த்து ஒரு சமூகத்தின் உணர்வை காயப்படுத்துதை நியாயப்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close