[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

காலா வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்

kaala-fans-visit-temple-before-kaala-release

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம், ‘காலா’.  இந்தத் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதாகக் கூறி, கன்னட அமைப்புகள் ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கூறின. இதற்கு கர்நாடக தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்து, ‘காலா’ படத்தை தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியும் ‘காலா’திரைப்படத்தை மாநிலத்தின் அமைதிக்காக கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பது தான் நல்லது என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா ரஜினியின் 161 வது திரைப்படம். பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள காலா வெற்றிகரமாக திரையில் ஓட வேண்டும் என்றும் ரஜினிகாந்த் அரசியல் எதிரிகளிடம் இருந்து  நல்ல முறையில் அரசியல் செய்ய வேண்டும் என்றும் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள வெயில் உகந்த அம்மன் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் சரவணன், ஜெயமனி ஆகியோர்கள் மண் சோறு சாப்பிட்டார்கள், இதற்காக இவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னரே காப்பு கட்டி விரதம் இருந்து நேர்த்திகடனை செலுத்தினர்கள், இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close