[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

’காலா’வை தடை செய்ய நீங்கள் யார்?: கேட்கிறார் பிரகாஷ் ராஜ்!

why-is-film-fraternity-targeted-always-prakash-raj

’காலா’ படத்தை தடை செய்ய நீங்கள் யார் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசமாகக் கேட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம், ‘காலா’. வரும் 7-ம் தேதி படம் வெளியாகிறது. காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதாகக் கூறி, கன்னட அமைப்புகள் ’காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கூறின. இதற்கு கர்நாடக தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்தது. முதல்வர் குமாரசாமியும் இதில் தலையிட முடியாது என்று கை விரித்து விட் டார்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதாவது: 

ஒரு மூத்த நடிகர் மற்றும் அரசியல் தலைவராகக் காட்டிக்கொள்ளும் நடிகர் ரஜினிகாந்த் கருத்து சொல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஆனால் ஒரு திரைப்படம் தடைசெய்யப்படுவது குறித்துதான் கவலைகொள்கிறேன். இது ரஜினி மட்டும் தொடர்புடையது இல்லை. அவருடன் நடித்த நடிகர்கள் முதல் விநியோகஸ்தர் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். பிரச்னைக்கு இதுதான் தீர்வா? அனை வருக்கும் போராட உரிமை உள்ளது. ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க நினைத்தால் திரைப்படத்தை மக்கள் பார்க்காமல் இருக்கலாம். அப்படிச் செய்தால்தான் மக்கள் எதிர்க்கிறார்களா எனத் தெரியும்.

பெரும்பான்மை மக்களுக்கு என்ன தேவை என்பதை வெகு சிலரே தீர்மானிக்கின்றனர். அப்படி இருக்கக் கூடாது. சில விளிம்புநிலை அமைப்பு கள் என்னை கன்னட எதிரி என கூறலாம். அதற்காக என் கருத்தைக் சொல்லக்கூடாது என்பது கிடையாது. தவறு தவறுதான்.அதை நாம் வெளிப் படையாகக் கூறவேண்டும். போராட்டகாரர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் வந்து பொதுவிடத்தில் பிரச்னை ஏற்படுத்துகின்றனர்.

நாட்டின் குடிமகன் என்கிற முறையில் எனக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கவேண்டும். ரஜினி படத்தை பார்ப்பதா இல்லையா என்பதை நான்தான் முடிவு செய்யவேண்டும். தடை செய்வதற்கு நீங்கள் யார்?
இவ்வாறு கூறியுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close