[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

‘காலா’வுக்கு கர்நாடக மாநிலத்தில் தடை

kaala-film-ban-in-karnataka

ரஜினிகாந்தின்‘காலா’திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலா’திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. மும்பை தமிழர்களின் வாழ்க்கையை பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ரஜினி தனது அரசியல் வாழ்க்கைக்கு இந்தப் படம் பெரிதும் உதவும் என அவரது ரசிகர்கள் நம்பி வருகின்றனர். ஆகவே படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ரஜினி இந்தப் படம் அரசியல் படமல்ல ஆனால் படத்தில் அரசியல் இருக்கும் என இசை வெளியீட்டு விழாவின் போது கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜூன் 7ஆம் தேதி வெளியாக உள்ள ‘காலா’ திரைப்படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. மேலும் கர்நாடக மாநில நலன் கருதி படத்துக்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே ரஜினி காவிரி பிரச்னை சம்பந்தமாக கருத்துக்கள் கூறி வந்தார். அந்தக் கருத்துக்கள் கர்நாடக மாநில மக்களுக்கு எதிராக இருந்ததால் இந்த நடவடிக்கையை வர்த்தக சபை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close