[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

“நிலம் உனக்கு அதிகாரம். எங்களுக்கு வாழ்க்கை” கனல் கக்கும் ‘காலா’ ட்ரெய்லர்

kaala-trailer-released

‘காலா’ ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலா’ ஜூன் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இரண்டாவது முறையாக ரஜினி இவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதால், இந்தப் படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று அப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது படக்குழு. அதனையொட்டி படத்தின் ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் தனுஷ்.

ரஜினி இசை வெளியீட்டு விழாவில் ஏற்கெனவே இந்தப் படம் அரசியல் படமல்ல; ஆனால் படத்தில் அரசியல் இருக்கிறது என்று கூறியிருந்தார். அதை உறுதி செய்யும் விதத்தில் ட்ரெய்லரில் அரசியல் கலந்த வசனங்கள் அனல் பறக்கின்றன. “குடிசை மத்தியில இருக்குற அழுக்கை அகற்ற போறேன். இந்த இருளை பிரகாசமா மாத்த போறேன்” என வில்லன் நானா படேகர் கூறுகிறார். அதைபோலவே ரஜினி “இந்த உடம்புதான் நமக்கு இருக்குற ஒரே ஆயுதம். இத உலகத்துக்கே தெரியப்படுத்துவோம். கூட்டுங்கடா மக்கள” என்கிறார். மேலும் “நிலம் உனக்கு அதிகாரம். நிலம் எங்களுக்கு வாழ்க்கை” என்கிறார் ரஜினி. மும்பை தாராவியில் வாழும் தமிழர்களின் கதையை பின்புலமாக வைத்து ‘காலா’ உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தப் படத்தில் மும்பை தமிழர்களின் நில உரிமை போராட்டத்தை களமாக வைத்து ரஜினி நடித்திருப்பது உறுதியாகி உள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close