[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

எங்கே இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்? உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா..?

aishwarya-rai-shared-her-childhood-pics

(இணையவாசிகள் கணிப்பின்படி ஆசிரியையின் வலதுபுறத்தில் உள்ள முதல் குழந்தை.)

நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

எத்தனையோ உலக அழகிகள் வந்தாலும் ஐஸ்வர்யா ராய்க்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஏகோபித்த வரவேற்பு உண்டு. நடிப்பிலும் கெட்டிக்காரரான அவர் சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். அவர் இன்ஸ்டாகிராம் வந்ததை அறிந்த எண்ணற்ற ரசிகர்கள் ராக்கெட் வேகத்தில் அவரை பின்தொடர ஆரம்பித்தனர். சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற அவர் அதன்பின் இந்தியா திரும்பினார். கேன்ஸ் விழாவில் பங்கேற்றிருந்த ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவின. இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

(இணையவாசிகள் கணிப்பின்படி கடைசி வரிசையில் இடமிருந்து வலமாக 6-வதாக நிற்கும் குழந்தை )

‘எல்கேஜி டைம்ஸ்’ என்ற கேப்சனோடு முதல் படத்தையும், ‘க்ரேடு 1’ என்ற கேப்சனோடு இரண்டாவது படத்தையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் புகைப்படத்தில் தான் எங்கு இருக்கிறேன் என்பதை ஐஸ்வர்யா ராய் தெரிவிக்கவில்லை. இதனால் ஐஸ்வர்யா ராயை கண்டுபிடிக்கும் முயற்சியாக அவரின் ரசிகர்கள் தீவிரமாக இப்புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close