[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

3 மில்லியனை தாண்டியது ‘கோலமாவு கோகிலா’ பாடல்

kolamavu-kokila-songs-crossed-3-million-on-you-tube-page

‘கோலமாவு கோகிலா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கல்யாண வயசுல’ பாடல் வீடியோ 3 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி உள்ளது. 

அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘கல்யாண வயசுல’ பாடல் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் யோகிபாபு நடிகை நயன்தாராவை லவ் பண்ணுவது போல உள்ள காட்சிகளை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். ‘உன்னால் நிக்குறன்.. அவ கண்ணால சொக்குறேன்.. எனக்கு கல்யாண வயசுதான் வந்துருச்சு.. வெயிட் பண்ணவா? இல்ல சாட் பண்ணவா?’ என்ற வரிகள் வைரலானது. ஆக்‌ஷன் ட்ராமா கலந்து தயாராகி உள்ள இந்தத் திரைப்படத்தின் பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அந்தப் பாடல் வெளியான 2 நாளில்  3 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்றுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை தட்டி விட்டிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close